ஆட்சதோன் பயிற்சிப் பட்டறை திருகோணமலையில்

வடமலை ராஜ்குமாா்

பிரிடிஸ் கவுன்சில் எஸ்.ஆர்.பி. திட்டத்தின் மூலம் கலைகளின் ஊடாக நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் செயற்திட்டத்தின் ஆட்சதோன் பயிற்சிப் பட்டறை திருகோணமலையில் உள்ள தனியார் விடுதியில் இடம் பெற்றது.

கடந்த 08,09,10 ஆகிய மூன்று தினங்கள்  இப்பயிற்சி இடம்பெற்றது.
பிரிடிஸ் கவுன்சிலின் இலங்கையில் நல்லிணக்கத்தை செயல்முறையினை வலுப்படுத்தும் திட்டத்தின் திட்ட பணிப்பாளர்  சின்னத்தம்பி விஜயபால மற்றும் பிரிடிஸ் கவுன்சிலில் தகவல் தொடர்பு இயக்குனர் லூயிஸ் கவ்ச்சர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இத் திட்டத்தின் ஆறாவது ஆட்சதோன் பயிற்சி பட்டறையாக நடைபெற்ற இந்தப் பயிற்சியில் திருகோணமலை மட்டக்களப்பு, அம்பாரை முல்லைத்தீவு, வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 03 கலைஞர்கள் கலந்து கொண்டிருந்தனர்.