சம்மாந்துறை பிரதேசத்தில் “செளபாக்கியா”வீடு திறந்து வைப்பு

சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி “செளபாக்கியா” விசேட வீடமைப்புவேலைத்திட்டத்திட்டத்தில் பூர்த்தி செய்யப்பட்ட வீடுகளை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (17) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் ஹனீபா தலைமையில் இடம் பெற்றது.

இவ் வீட்டிற்கு சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினூடாக ஆறு இலட்சம் ரூபா மானிய நிதியுதவியின்கீழ்இபயனாளிகளின் பங்களிப்புடன் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது.

சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் உள்ள மல்கம்பிட்டி கிராம சேவையார் பிரிவில் வசிக்கும்பயனாளிக்கே இவ்வீடு வழங்கிவைக்கப்பட்டது.

நிரந்தர வீடில்லாத பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்கள், வறுமைக் கோட்டின் கீழ் உள்ள சமூர்த்திபெறும் ஏழைக் குடும்பங்களுக்கு அவர்களின் சொந்த இடங்களில் வீடமைத்து கொடுக்கும் அரசின் இவ்வேலைத்திட்டத்தின் கீழ் இவ் வீடு குறித்த பயனாளியின் சொந்த இடத்தில் நிர்மாணிக்கப்பட்டுவழங்கிவைக்கப்பட்டது.

இன் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் யு.எம்.அஸ்லம் , சம்மாந்துறைசமூர்த்தி தலைமை பீட முகாமையாளர் யு.எல்.எம் சலீம்,சம்மாந்துறை பிரதேச செயலக் கணக்காளர் ஐ.எம்பாரிஸ், கிராமஉத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.