மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தடுப்பு மூன்றாம் கட்டம் பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று (17) மாவட்ட செயலக கேட்கோர் கூடத்தில் இடம்பெற்றது.
நாட்டில் கொரோனா பரவல் மேலும் அதிகரித்துவரும் நிலையில் ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளாணவர்களும் இணங்காணப்பட்டு வருகின்றனர். இதனிடையில் பண்டிகைக் காலத்திற்கு முன்னதாக மூண்றாம் கட்ட பூஸ்டர் தடுப்பூசி ஏற்றிக்கொள்ள வேண்டும் என்ற அரசின் அறிவுறுத்தலுக்கமைய பொதுமக்களும் அரச உத்தியோகத்தர்களும் ஆர்வத்துடன் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபடுவதை அவதானிக்ககூடியதாக உள்ளது.