(பொலிவேரியன் நிருபர் – எம்.எஸ்.எம்.ஸாகிர்)
ஐக்கிய இளைஞர் சக்தியினால் அட்டாளைச்சேனையில் இடம்பெறவுள்ள beach carnival கிரிக்கட் சுற்றுத்தொடருக்கான ரீ – சேர்ட் அறிமுக நிகழ்வு (15) கல்முனை பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம் பெற்றது.
ஐடிஎம் நேசன் (IDM Nation) நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி வி. ஐனகனின் பூரண அனுசரணையில் இக்கிரிக்கெட் சுற்றுத் தொடருக்கான ரீ- சேர்ட்கள் வழங்கப்பட்டு, அதற்கான அறிமுக நிகழ்வு ஐக்கிய இளைஞர் சக்தியின் அட்டாளைச்சேனைப் பிரதேச அமைப்பாளரும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமானமான முகம்மட் சர்பானின் ஏற்பாட்டில், ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் அணியின் தேசிய செயற்குழு உறுப்பினரும் அம்பாறை மாவட்ட செயலாளரும் அமைப்பாளருமான றிஸ்கான் முகம்மடின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்,
ஐக்கிய இளைஞர் சக்தியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான
மயந்த திஸாநாயக்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
ஐக்கிய இளைஞர் சக்தியின் ஆலோசகர் கலாநிதி அர்ஷாத் உதுமான் மற்றும் ஐக்கிய இளைஞர் சக்தியின் அம்பாறை மாவட்ட செயற்குழு முக்கியஸ்தர்களான ஆசிக் சுபைர், வினோத், ரோஹன உட்பட இளைஞர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.