கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் பணிப்பாளர்கள் சபைக்கு புதிய பணிப்பாளர்களுள் ஒருவராக நாஸிறூன் நியமனம்.

பைஷல் இஸ்மாயில் –
கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் பணிப்பாளர்கள் சபையின் பணிப்பாளர் உறுப்பினராக, நிந்தவூரைச் சேர்ந்த எஸ்.எல்.எம். நாஸிறூன், கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால், கடந்த புதன்கிழமை (15) நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப துறை விரிவுரையாளரான இவர், கிழக்கு மாகாண ஆளுனரின் மாகாண சுதேச மருத்துவ மேம்பாட்டு விஷேட ஒருங்கிணைப்பு குழு அங்கத்தவரும், ஜனாதிபதியின் வியத்மக அமைப்பின் அம்பாறை பிராந்திய உறுப்பினருமாவார்.