கந்தளாயில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லை அதிகரிப்பு.

எப்.முபாரக்
திருகோணமலை கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட திருகோணலை  கண்டி பிரதான வீதியில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பிரயாணிகள் கவலை தெரிவிக்கிறார்கள் .
இவ்வாறு கட்டாக்காலி மாடுகள் கந்தளாய் மணிக்கூட்டு கோபுரத்தின் முன்னாள் இவ்வாறு நடமாடுவதால் போக்குவரத்துக்கு இடையூர் செய்வதாகவும் வாகன விபத்தும் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றார்கள்.
அத்தோடு வீதியை மறித்துக்கொண்டு கட்டாக்காலி மாடுகள் செல்வதனால் வாகனங்களில் செல்வோர் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.ஒளி சமிக்கைகளை வெளிக்காட்டியும் கட்டாக்காலி மாடுகள் நகர்வதில்லை எனவும் முறையிடுகின்றனர்.
அண்மையில் கந்தளாய் நகரில் இரவு வேளையில் கட்டாக்காலி மாகளுடன் மோதுண்ட ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளான சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.
இவ்விடயம் தொடர்பில்  கந்தளாய் பிரதேச சபை தவிசாளரிடம் தெரியப்படுத்தியும் எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லையெனவும் முறையிடுகின்றனர்.
பாரிய உயிர்ச்சேதம் மற்றும் விளைவுகள் ஏற்படுவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுத்து நிறுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது.