நுவரெலியா பிரதேச சபையின் முன்மாதிரி

தலவாக்கலை  பி.கேதீஸ்
நுவரெலியா பிரதேச சபை மற்றும் மாநகர சபைக்குட்பட்ட தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலமான உயர்தர பாடசாலைகள் அனைத்திற்கும் மாதிரி வினாத்தாள்கள் அச்சிட்டு வழங்குவதற்கு பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தவகையில் நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியில் கா.பொ.த உயர்தரத்தில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கும்  சகல பாடங்களுக்குரிய மாதிரி வினாத்தாள்கள் அச்சிட்டு வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் நுவரெலியா பிரதேச சபையின் செயலாளர், பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள்  கலந்து கொண்டனர்.