திருக்கோவில் பொலிஸ் பிரிவில் முதலாவது கேஸ் வெடிப்பு பதிவு

(திருக்கோவில்  நிருபர்-எஸ்.கார்த்திகேசு)

அம்பாரை திருக்கோவில் பொலிஸ்ப் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் கிராமத்தில் முதலாவது கேஸ் வெடிப்பு ஒன்று நேற்று இரவு இடம்பெற்று இருப்பதுடன் தெய்வாதினமாக வீட்டில் யாருக்கு எந்தவொரு ஆபத்தும் இடம்பெறவில்லை.

இவ் கேஸ் வெடிப்பானது விநாயகபுரம் 4 கடற்கரை வீதியில் அமைந்துள்ள பாக்கியராசா ஜெயந்தினியின் வீட்டில் நேற்று புதன்கிழமை (15) இரவு இடம்பெற்றுள்ளது.

இவ் கேஸ் வெடிப்பு பற்றி வீட்டில் உரிமையாளர் தெரிவிக்கையில் தாம் கேஸ் அடுப்பில் சமையல் வேலைகளை முடித்து விட்டு ஓப் செய்து விட்டு வீட்டினுள் இருந்த வேளை சமையல் அறையில் ஏதோ சத்தம் கேட்டதாகவும் வந்து பார்த்தபோது கேஸ் அடுப்பு வெடித்து சிதறி கிடந்தாகவும் தெரிவித்து இருந்தார்.

இவ் சம்பவம் தொடர்பாக அறிந்து கொண்ட திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் திருக்கோவில் பொலிஸ் நிலையப் பதில் கடமை பொலிஸ் அதிகாரி எஸ்.எஸ்.எஸ்.சமந்த மற்றும் திருக்கோவில் பிரதேச செயலக சமூர்த்தி சமூக பாதுகாப்பு உத்தியோகத்தர் எஸ்.பி.சீலன் கிராம சேவை உத்தியோகத்தர் அனித்தன் அகியோரும் நேரில் சென்று விசாரணைகளை மேற்கொண்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.