ரீ.எல்.ஜவ்பர்கான்
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிழக்கு மாகாண பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உட்பட சுகாதாரத்துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் இன்று மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்னால் ஆரம்பமான ஆர்ப்பாட்டம் பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிமனை வரை சென்றது.
பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தாதிய உத்தியோகத்தர்கள் மருத்துவ மாதுக்கள் தொழில்நுட்ப ஆய்வுகூட பரிசோதகர்கள் உட்பட சுகாதாரத்துறை சார்ந்த பலர் இவ் ஆர்ப்பாட்டத்தில் கவந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை மாவட்டங்களச் சேர்ந்த சுகாதாரத்துறை உத்தியோகத்தர்கள் பெருமளவில் இவ் ஆர்ப்பாட்டத்தில் இணைந்திருந்தனர்.