திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாடிகோராள
திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று(16) மாவட்ட செயலகத்தில் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்களான கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகோரல அவர்களினத லைமையில் நடைபெற்றது.
2021 ஆண்டு திருகோணமலை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களது முன்னேற்ற மீளாய்வு இதன்போது முன்வைக்கப்பட்டதுடன்
சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட பல விடயங்களை கிராமங்களுக்கு சென்று ஏற்படுத்தக்கூடிய சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றதாகவும் மக்களுடைய உற்பத்திசார் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதாக இதன்போது அரசாங்க அதிபர் சமன் தர்சன பாடிகோராள தெரிவித்தார்.
நாட்டினுடைய தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். குறிப்பாக உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த கூடிய வகையில் திட்டங்களை வடிவமைத்து நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை காணப்படுவதாகவும் அதற்கு அனைவருடைய ஒத்துழைப்பும் வேண்டப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டம் பல அரிய வளங்களைக் கொண்டு காணப்படுகின்றது. மக்களுடைய பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்து அந்த பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்குவதற்கு அரசியல் தலைமை தயாராக இருப்பதாகவும் அனைத்து உத்தியோகத்தர்களும் பொறுப்புடன் செயற்படுவதன் மூலம் 2022ஆம் ஆண்டு பல்வேறு வகையான அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தி அவற்றை மக்கள் மயப்படுத்த கூடிய சந்தர்ப்பம் கிடைக்கப் பெறும் என்றும் இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகோரல தெரிவித்தார்.