கடந்த 24 மணிநேரத்தில்; மட்டக்களப்பு நகர் பகுதிகளில் அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் பருவப் பெயர்ச்சி மழை தொடர்ச்சியாக பெய்து வருகின்றது. இதனடிப்படையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பு நகர் பகுதியில் 42.8 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதுதவிர மாவட்டத்தின் பலபகுதிகளிலும் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. உருகாமத்தில் 35.4 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சியும், கட்டுமுறிவில் 21.5 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சியும், உன்னிச்சையில் 9 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சியும், வாகரைப் பகுதியில் 3.1 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.
இதேவேளை இன்றைய தினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதுடன் இம்மழைவீழ்ச்சியானது எதிர்வரும் 20ம் திகதிவரை நீடிக்கலாம் என எதிர்பார்ப்பதாக மாவட்ட வானிலை அதிகாரி சுப்பிரமணியம் ரமேஸ் மாவட்ட ஊடகப் பிரிவிற்கு தகவல் தெரிவித்தார்.