பிரதேச மட்ட பயிற்றுவிப்பாளர்களுக்கான நேர்முகத்தேர்வு.

mde

(றாசிக் நபாயிஸ்)

——————————————–
பிரதேச செயலகங்களினால் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் உதைப்பந்தாட்டம், கிரிக்கெட் மற்றும் ஏனைய விளையாட்டு துறைசார்ந்த பயிற்றுவிப்பாளர்களை
தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.
அதனடிப்படையில் விளையாட்டுத்துறை
பயிற்றுவிப்பாளர்களை
தெரிவு செய்வதற்கான
நேர்முகத்தேர்வு
இன்று (15)ஆம் திகதி
புதன்கிழமை கல்முனை பிரதேச செயலக ஸ்மாட்
கூட்ட மண்டபத்தில்
பிரதேச செயலகம்
விளையாட்டு உத்தியோகத்தர், ஆர்.
றப்ஷான் அஹமட்டின் ஒருங்கிணைப்பில்
இடம் பெற்றது.
இதில் கல்முனை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பாடசாலையின் இருக்கின்ற உடற்பயிற்சி ஆசிரியர்கள், விளையாட்டு துறையில் திறமைவாய்ந்த வீரர்கள் இந்நேர்முகத் தேர்வில் பங்குபற்றினார்கள்.
இதன் போது பங்குபற்றியவர்களிடமிந்து விளையாட்டு டிப்ளோமா / உயர் டிப்ளோமா சான்றிதழ், விளையாட்டுச் சங்கத்தின் பயிற்றுவித்தல் துறைசார்ந்த சான்றிதழ்,
பயிற்சியாளராக குறிப்பிட்ட விளையாட்டில் சர்வதேச ரீதியில், தேசிய ரீதியில், மாகாண ரீதியில், மாவட்ட ரீதியில் வீரர்களை உருவாக்கியிருப்பின் அதனை உறுதிப்படுத்துவதற்கான சான்றிதழ் மற்றும் பயிற்றுவித்தல் துறையில் உள்ள அனுபவ சான்றிதழ் போன்றன நேர்முகத்தேர்வின் போது பரிசீலிக்கப்பட்டது.
இந்நேர்முகத் தேர்வில்
அம்பாறை மாவட்ட செயலக மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தகர் எம்.ஜ.எம்.அமீர் அலி, கல்முனை வலயக்கல்வி அலுவலக விளையாட்டு உதவிப் பணிப்பாளர் யூ.எல்.எம்.சாஜித், அம்பாறை மாவட்டச் செயலக விளையாட்டு பயிற்றுவிப்பாளர் எஸ்.எல்.தாஜுடீன் மற்றும்
பிரதேச செயலகம்
விளையாட்டு உத்தியோகத்தர், ஆர்.
றப்ஷான் அஹமட் போன்றோர் கலந்துகொண்டு நேர்முகத்தேர்வு களை நடாத்தினார்கள்.