பொன்ஆனந்தம்
திருகோணமலை மாவட்டத்தில்பல்வேறு வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்களை பராமரிப்பதற்காக பாதுகாப்பு நிலையம் ஒன்று இன்மையால் பாதிக்கப்படும் பெண்கள் சிரமப்படுவதாக முறையிடப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பு இதற்கான கோரிக்கையை கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் திடம்விடுத்துள்ளது.
இன்று ஜேக்கப் பார்க் விடுதியில் நடந்த பயிற்சி முடித்த வர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சியில் மகஜர் மூலம்இக் கோரிக்கையை இணைவலையினர் விடுத்துள்ளனர்
மனித உரிமை கள் மற்றும் தையல் பயிற்சி களை முடித்தவர்களுக்கு சான்றிதழ் கள் இங்கு வழங்கப்பட்டது.
இக் கூட்டத்தில் பிரதம விருந்தினராக ஆளுநர் கலந்து கொண்டிருந்தார். இவரிடம் குறித்த கோரிக்கை மனு வலையமைப்பு பணிப்பாளர் அவர்களால் கையளிக்கப்பட்டது.
கிராம மட்டங்களிலும் பல இடங்களிலும் பெண்கள் வன்முறைக்குள்ளாகி பாதிக்கப்படுகின்றனர். அவ்வாறு பாதிக்கப்படுபவர்கள் பாதுகாப்பாக விசாரணை க்காலங்களில் வைத்து பராமரிக்க safe house என்றழைக்கப்படும் பாதுகாப்பு நிலையம் அவசியமாகும்.
திருகோணமலை யில் அந்த வசதி இல்லாமல் உள்ளது. எனவே அதற்கான ஏற்பாட்டை அரசாங்கம் செய்யவேண்டும். எனவும் அந்த மகஜரில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.