கவிஞர் எம்.ஐ.எம். முஸ்தபா எழுதிய காத்தான்குடியின் கண்ணிய மஸ்ஜிதுகள் எனும் வரலாற்று நூல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான்)

காத்தான்குடி கலை இலக்கிய கழகத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி மத்தியஸ்த சபை தலைவர் எம்.ஐ. உசனார் தலைமையில் இந்த நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ். எச் அஸ்பர் பிரதி தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெஸீம் உட்பட முக்கிய பிரமுகர்கள் காத்தான்குடி நகரசபை உறுப்பினர்கள் உலமாக்கள் கலை இலக்கியவாதிகள் வர்த்தகர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.

இதன் போது கவிஞர் எம்.ஐ.எம்.முஸ்தபா எழுதிய காத்தான்குடியில் கண்ணிய மஸ்ஜிதுகள் எனும் வரலாற்று நூல் வெளியீட்டு வைக்கப்பட்டதுடன் நூல் அறிமுக உரையை கவிஞரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான ரீ.எல்.ஜௌபர்கான் நிகழ்த்தினார். நூலின் நயவுரையை கவிமணி மௌலவி எம்.எச்.எம். புகாரி நிகழ்த்தியிருந்தார்.

இந்த நிகழ்வில் நூலாசரியருக்கு கலை இலக்கிய கழகத்தினால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சன்னம் வழங்கி கௌரவம் வழங்கப்பட்டது.