(காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா)
நாடறிந்த கவிதாயினி சம்மாந்துறை மஷூறா எழுதிய ‘நதிகளின் தேசியகீதம்’ எனும் கவிதைத்தொகுதி நூல் வெளியீட்டுவிழா சனிக்கிழமை(11) மருதமுனையில் நடைபெற்றது.
மருதமுனை அல் ஹிக்மா ஜூனியர் பாடசாலையில் எழுத்தாளர் எ.எம்.நௌசாட் தலைமையில் நடைபெற்ற இந்நூல்வெளியீட்டுவிழாவிற்கு, பிரதமஅதிதியாக தென்கிழக்குப்பல்கலைக்கழக முதன்மைப்பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் கலந்துசிறப்பித்தார்.
நயவுரையை பேராசிரியர் செ.யோகராசா நிகழ்த்த, நுண்பார்வையுரையை சத்தார் எம்.பிர்தௌஸ் நிகழ்த்தினார்.
தமிழா ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் எஸ் எம் ஜெலீஸ் நிகழ்வை ஏற்பாடுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.