உற்பத்தித்திறன் விருதுக்கான போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு விசேட விருது!!

 

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு 2018/2019 ஆம் ஆண்டுக்கான அரச துறை திணைக்களங்களுக்கு இடையிலான தேசிய தரப்படுத்தலில் உற்பத்தித்திறன் விருதுக்கான போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் விசேட விருதினை பெற்றுள்ளது.

அதேவேளை அரச துறையில் பிரதேச செயலகங்களுக்கு இடையிலான போட்டித் தொடரில் பங்குகொண்ட 13 பிரதேச செயலகங்கள் வெற்றி பெற்றுள்ளது .

அந்த வகையில் காத்தான்குடி பிரதேச செயலகம் இரண்டாம் இடத்தினையும், முண்முனை வடக்கு, மண்முனை தென் எருவில்பற்று, மண்முனைப்பற்று ஆகிய பிரதேச செயலகங்கள் மூன்றாம் இடத்தினையும் போரதீவுப்பற்று, ஏறாவூர்ப்பற்று, கோறளைப்பற்று மற்றும் கோறளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச செயலகங்கள் சிறப்பு மெச்சுரை விருதினையும்
மண்முனை தென்மேற்கு, கோறளைப்பற்று தெற்கு, கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்கு வடக்கு மற்றும் ஏறாவூர் நகர் ஆகிய பிரதேச செயலகங்கள் மெச்சுரை விருதினையும் பெற்றுள்ளது.