(எருவில் துசி) கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம் என்பன இணைந்து கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் இ.தேவஅதிரன் அவர்களின் தலைமையில் இன்று மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர் முதல் அமர்வாக பி.ப 02.00 மணிக்கு இணைய தொழில்சார் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் பொடி கமகே அவர்களினால் இணைய வழி ஊடகவியலாளர்கள் தற்காலத்தில் ஏற்பட்டுள்ள சவால்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது இதன் போது ஊடகவியலாளர்கள் தாம் எதிர்நோக்கும் பிரட்சினைகளையும் அதற்கான தீர்வுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
மேலும் நான்கு மணிக்கு மனித உரிமைகள் தொடர்பாக வருகைதரு விரிவுரையாளர் ராதா ஞானரெட்னம் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர் முகமட் இஸ்மயில் பாறுக், திருமதி கேதிஸ்வரி யோகதாஸ் மற்றும் இ.மனோகரன் ஆகிய பிரதிநிதிகள் மனித உரிமைகள் தொடர்பாக கருத்துரையாற்றினர் நிகழ்வு சிறப்படைய உதவி அனைவருக்கும் ஊடகவியலாளர் வ.சக்திவேல் அவர்களினால நன்றி கூறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது
இறுதியாக மாலை 6.00 மணியளவில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் ஊடகவியலாளர்களின் சுதந்திரம் நிலைநாட்டப்பட வேண்டும் என மெழுகுவர்த்தி கொழுத்தி போராட்த்தில் ஈடுபட்டதுடன் நிகழ்வு நிறைவுற்றது.