சங்குமான் கண்டிப் பிரதேசத்தில் புத்தர்சிலை விவகாரம் இனங்களுக்கிடையில் குழப்பத்தை ஏற்படுத்தும் திட்டமா? – பாராளுமன்ற உறுப்பினர் த. கலையரசன்

 

(எஸ்.சபேசன்) பொத்துவில் சங்குமான் கண்டிப் பிரதேசத்தில் புத்தர்சிலை வைக்கப்பட்டுள்ளமை இந்நாட்டில் இடம்பெறுகின்ற அஜாரகச் செயற்பாடக இருப்பகதுடன் இந்நாட்டில் வாழுகின்ற தமிழ்மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் மீண்டும் ஒரு குழப்பத்தினை ஏற்படுத்துவதற்கான செயலாகவே இதனைப் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் த. கலையரசன் தெரிவித்தார்.

சனிக்கிழமை 11 ஆம் திகதி அதிகாலை வேளையிலே பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் சங்குமான்கண்டி மலையில் புத்தர்சிலையினை வைத்துள்ளமையினைக் கண்டித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில் சங்குமான்கண்டி மலையில் நான்கு பௌத்தகுருமார் புத்தர்சிலை ஒன்றினை சனிக்கிழமை அதிகாலை வைத்துள்ளார்கள் இதற்கு முன்னரும் இப்பிரதேசத்தில் புத்தர் சிலை வைப்பதற்கான நடவடிக்கைகள் பலதடவை மேற்கொள்ளப்பட்டபோதும் மக்களது கடும் எதிர்ப்பினால் கைவிடப்பட்ட வரலாறுகளும் அதிகம் உண்டு.
இன்று அந்த இடத்தில் புத்தர்சிலையினை வைத்து இருக்கின்றார்கள் இந்தப்பிரதேசம் முற்றுமுழுதாக தமிழர்கள் வாழுகின்ற பிரதேசம் இந்நாட்டில் இடம்பெறுகின்ற அஜாரகச்செயற்பாடக இருப்பகதுடன் இந்நாட்டில் வாழுகின்ற தமிழ்மக்களையும் சிங்கள மக்களுக்கும் இடையில் மீண்டும் ஒரு குழப்பத்தினை ஏற்படுத்துவதற்கான செயலாகவே இதனைப் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது
இனங்களுக்கு இடையில் குழப்பத்தினை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக மதத்தலைவர்கள் செயற்படுவது வேதனையான விடயமாகும் வனபரிபாலன சபைக்குச் சொந்தமான காணிஎனக்கூறி அவ்விடங்களில் புத்தர் சிலைகளை வைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டால் நாட்டில் உள்ள அனைத்து அரசகாணிகளிலும் புத்தர்சிலைகளை வைப்பதற்கு அரசு உடந்தையாக இருக்கின்றதா அதாவது தமிழ் மக்கள் முழுமையாக வாழும் பகுதிகளில் இவ்வாறன செயற்பாடுகள் மேற்கொள்வது அத்துமீறிய நில அபகரிப்பாக இருக்கின்றதா என்ற கேள்வி தமிழ் மக்களிடம் எழுகின்றது.
இவ்வாறாக மத குருமார்கள் நினைத்த இடங்களில் மத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இந்த நாட்டின் சட்டம் இடம்கொடுக்கிறதா.
இந்த நாட்டை மீண்டும் ஒரு குழப்பகரமான சூழலுக்குள் தள்ளுவதற்கான நடவடிக்கைகளை அரசுமேற்கொள்ளுகின்றதா இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தி சமாதானமற்ற பிரதேசமாக மாற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொள்கின்றனர் இந்தப் பின்னணியில் அரசாங்கமும் இருக்கிறது
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது இந்தநாடு பௌத்தநாடு என்ற அடிப்படையில் ஆட்சி நடைபெறவேண்டும் எனத்தெரிவித்திருந்தனர் அதன் அடிப்படையில்தான் இந்தச்சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
இந்த விடயம் சாதாரணவிடயமாக நாங்கள் பார்க்கமுடியாது வடகிழக்குப்பிரதேசங்களில் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
இந்தவிடயம் தொடர்பாக அதிகாரிகளைத் தொடர்புகொண்டு கேட்டபோது இப்பகுதி வனபரிபாலன சபைக்குரியதும் அதில் 2 ஏக்கர் பௌத்த மதகுரு ஒருவருக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரியவந்தது இது வேதனையான விடயம் வனபரிபாலன சபையானது தாங்கள் விரும்பிய பெரும்பான்மையினருக்கு காணிகளை வழங்குவது ஏற்றுக்கொள்ளமுடியாது இவ்வாறான செயற்பாட்டினை வண்மையாகக் கண்டிப்பதுடன் இவ்வாறு நடைபெறுவது இந்நாட்டில் மோசமான சூழலை உருவாக்கும் எனவும் தெரிவித்தார்.