கிழக்கு ஆளுனரை முற்போக்கு வளர்ச்சி சங்கத்தினர் சந்தித்து பேச்சு.

(பொலிவேரியன் நிருபர் – எம்.எஸ்.எம்.ஸாகிர்)பட்டதாரி பயிலுனர்களுக்கு அவர்களது சொந்த மாவட்டங்களில் நிரந்தர நியமனங்களை வழங்குவது பற்றியும், ஆசிரிய சேவைக்குள் பட்டதாரிப் பயிலுனர்களை இணைத்துக்கொள்வது சம்பந்தமாகவும் தெளிவூட்டல்களைப் பெற்றுக்கொள்வதற்காக கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பதை  முற்போக்கு வளர்ச்சி சங்கத்தினர் சந்தித்து கலந்துரையாடிய நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுனரின் செயலகத்தில்  இடம்பெற்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் “சுபீட்சத்தின் நோக்கு” வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டிருக்கின்ற 53,000 பட்டதாரிப் பயிலுனர்களுக்குமான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் ஜனவரி மாதம் 03ஆம் திகதி நடைபெற ஏற்பாடாகியிருக்கின்ற இச்சந்தர்ப்பத்தில், மாகாண சபைகளுக்குட்பட்ட அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களில் பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டிருக்கின்ற பட்டதாரிப் பயிலுனர்களுக்கு அவர்களது சொந்த மாவட்டங்களில் நிரந்தர நியமனங்களை வழங்குவது பற்றியும், ஆசிரிய சேவைக்குள் பட்டதாரிப் பயிலுனர்களை இணைத்துக்கொள்வது சம்பந்தமாகவும்  தெளிவூட்டல்களைப் பெற்றுக்கொள்வதற்காக கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பதை முற்போக்கு வளர்ச்சி சங்கத்தின் தலைவர் வீ.கே.சந்தனவின் தலைமையில், கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களையும் பிரதிநிதித்துவம் செய்து அதன் மூன்று பிரதான ஒருங்கிணைப்பாளர்களினதும் பங்குபற்றுதலுடன் கிழக்கு மாகாண ஆளுனரின் செயலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது.
அன்றைய தினம் கிழக்கு மாகாணத்தில் பயிலுனர்களாக கடமையாற்றுகின்ற பட்டதாரிகள் எதிர்நோக்கும் பிரச்சிணைகள் சம்பந்தமாக ஆளுனருக்கு விளக்கி கூறப்பட்டதுடன் அவற்றுக்கான தீர்வுகளும் பெற்றுக்கொள்ளப்பட்டதும் குறிப்பிடத்தக்கது .