முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஸ்டித்தார்கள் என கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை.

(க.ருத்திரன்) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஸ்டித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் பயங்கார வாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 10 பேர் ; நேற்று விடுதலை செய்யப்ட்டனர்.
கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கும்புறுமூலை கடற்கரையில் கடந்த 2021, மே 18 இல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஸ்டித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் 2 பெண்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு பிணை மறுக்கப்பட்டு 7 மாதங்களாக தடுத்து வைக்க்பட்டிருந்தனர்.இன்று மாவட்ட வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.கைதானவர்கள் சார்பில் சட்டதரணிகளான க.சுகாஸ், ஜெயசிஙகம், இரம்சீன் உள்ள சட்டதரணிகள் ஆஜராகியிருந்தனர்.