பெரியகல்லாறு பிரதான வீதியில் பாரிய விபத்து.

(ரக்ஸனா) மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் பெரியகல்லாற்றில் திங்கட்கிழமை(06) இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதுடன், கார், மற்றும் ஸ்ரீலங்கா ரெலிகொம் கம்பத்திற்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. கொழுப்பிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த கார் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குப்பட்ட பெரியகல்லாற்றி வைத்து அருகிலிருந்த ஸ்ரீ லங்கா தொலைத் தொடர்புக்குச் சொந்தமான கம்பத்தில் மோத்தியதனாலேயே இவ்விபத்துச் சம்பவித்துள்ளது. இதில் பயணித்த இருவரும் தெய்வாதீனமாக  உயிர் பிழைத்துள்ளதுடன், எனினும் அவர்கள் இருவரும் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளனர். இவ்வாறு காயமடைந்த இருவரும் வைத்தியர்களான தம்பதிகளாவர்.

இவ்விபத்துச் சம்பவத்தில் காருக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், இலங்கை தொடலைத் தொடர்பு கம்பத்திற்கும் சேதம் ஏற்பட்டள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

(வ.சக்திவேல் )