ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன்   பிரதமர்

(வாஸ் கூஞ்ஞ) பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு கோரி பாராளுமன்ற வளாக நுழைவாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்திக்கு சென்ற கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் திங்கள்கிழமை (06.12.2021) முற்பகல் அவர்களுடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்யும் போது இதனைவிட அதகளவிலான உறுப்பினர்களை ஈடுபடுத்த வேண்டும் என கௌரவ பிரதமர் இதன்போது ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.

வரலாற்றில் தன்னுடன் இணைந்து அரசியல் போராட்டங்களில் ஈடுபட்ட உறுப்பினர்களை பார்த்த கௌரவ பிரதமர் கடந்த காலங்களில் இவ்வாறான போராட்டங்களில் ஈடுபட்ட விதம் குறித்து அவர்களுடன் நினைவுகளை பகிர்ந்துக்கொண்டு அவ்விடத்திலிருந்து விலகிச் சென்றார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, இம்தியாஸ் பாகிர் மாகர், பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட பலர் இவ்வாறு கௌரவ பிரதமருடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.