அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்  நிறைவேற்றம்.

(நூருல் ஹுதா உமர், கே.ஏ.ஹமீட்)அம்பாறை மாவட்டம், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 56ஆவது அமர்வு  பிரதேச சபை தவிசாளருர் ஏ.எல் அமானுல்லா தலைமையில் சபா மண்டபத்தில் இன்று திங்கள் கிழமை இடம்பெற்றது. இதன்போது வழமையான சபை நடவடிக்கையை தொடர்ந்து அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளரினால்  2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சமர்பிக்கப்பட்டது.தேசிய காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், பொது ஜன பெரமுன, ஐக்கிய தேசிக் கட்சி ஆகிய 4  கட்சிகளை பிரதிநித்துவப்படுத்தும் 18 உறுப்பினர்களை கொண்ட சபையின் 15 உறுப்பினர்கள் கலந்து கொண்ட இன்றைய சபை அமர்வில் வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.