(எச்.எம்.எம்.பர்ஸான்)வைராக்கியத்துடன் கல்வி கற்கின்ற போதுதான் உலகில் சாதனைகள் படைக்க முடியும் என்று வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய அதிபர் எம்.ரீ.எம்.பரீட் தெரிவித்தார்.
பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் மாணவிகள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் பேசுகையில்,
கடந்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் எமது பாடசாலையில் ஐந்து மாணவிகள் அனைத்துப் பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர்.
அவர்கள் கொரோனா காலத்தில் மிகவும் இக்கட்டான சூழலில் கல்வி கற்று இவ்வாறு சாதனைகளை படைத்துள்ளனர்.
அந்த மாணவிகளால் இவ்வாறு சாதனைகள் படைக்க முடியும் என்றால் ஏன் உங்களால் முடியாது. தன்னாலும் முடியும் என்ற நம்பிக்கையுடன் நீங்களும் வைராக்கியம் கொண்டு கல்வி கற்க வேண்டும்.
எல்லோரும் பாடசாலைக்கு வருகிறார்கள் நானும் வருகிறேன் என்று வராமல் நான் சாதிக்க வேண்டும். சாதனைப் பெண்ணாக வர வேண்டும் என்ற எண்ணத்துடன் வர வேண்டும்.
இன்று கல்வியில் கை, கால் இல்லாதவர்கள், மிகவும் வறுமையில் உள்ளவர்கள் எல்லாம் உலகில் சாதனைகள் படைத்துள்ளனர்.
அவர்களை விட எல்லா வசதி வாய்ப்புக்களும் உள்ள நீங்கள் சாதனைகள் நிலைநாட்ட பின்னிற்கக் கூடாது.
நீங்கள் உங்களது நேர, காலத்தை வீணாக செலவிட்டு உங்களையும் உங்களது பெற்றோர்களையும் ஏமாற்றிக் கொள்ள வேண்டாம்.
எனவே, கிடைக்கின்ற சந்தர்பத்தையும், வாய்ப்புகளையும் பயன்படுத்தி கல்வி கற்று மாணவர்கள் சாதனை படைக்க வேண்டும் என்றார்.