ஜனாதிபதி கிண்ணம் மட்டக்களப்பில் முனைக்காடு இராமகிருஷ்ணா வசமானது

(படுவான்கரையூரான்)

ஜனாதிபதி கிண்ணம் மட்டக்களப்பில் முனைக்காடு இராமகிருஷ்ணா வசமானது.

மட்டக்களப்பு கால்ப்பந்தாட்ட சம்மேளனம் 2021ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி கிண்ணம் என்று நடாத்திய மாவட்ட A,B பிரிவு அணிகளுக்கிடையிலான கால்ப்பந்தாட்ட போட்டியானது 27.10.2021 அன்று வெபர் மைதானத்தில் ஆரம்பமானது. மாவட்டத்தின் 20 அணிகள் பங்குபற்றிய Knock out முறையிலான இறுதி போட்டி நேற்றைய தினம் (04) இடம்பெற்றது. வரலாற்றில் படுவான்கரை பிரதேசத்தை பிரதிநித்துவப்படுத்திய அணிகளான முனைக்காடு இராமகிருஷ்ணா, கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா ஆகியவை இறுதிச்சுற்றில் பங்குபற்றியிருந்தது. போட்டி நேரம் முடிவுறும் வரை எந்த அணிகளும் வெற்றிக்கோள்களை செலுத்தாமையினால் தண்டனை உதைமூலம் முனைக்காடு இராமகிருஷ்ணா அணி வெற்றி பெற்றது.

2 ஆம் இடத்தை கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா அணி பெற்றதுடன், 4ஆவது இடத்தினை முதலைக்குடா விநாயகர் அணியினர் பெற்று படுவான்கரை மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.