(சாவகச்சேரி நிருபர்) கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள ரயில் கடவையில் 03/12 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.புகையிரதக் கடவை ஊடாக கடக்க முற்பட்ட மகேந்திரா வாகனத்தை யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதம் மோதியதில் இவ் அனர்த்தம் நேர்ந்துள்ளது.இதில் மகேந்திரா வாகனத்தில் பயணித்த கொடிகாமம் தவசிகுளம் பகுதியைச் சேர்ந்த 38வயதான சூசைநாதன் பிரதீப் என்பவரே உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவரது சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
|