விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி

விபத்தில் இளம் பரிதாப பலி

(எச்.எம்.எம்.பர்ஸான்) விபத்துக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெள்ளிக்கிழமை (3) உயிரிழந்துள்ளார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொதுச் சந்தை பிரதான வீதியில் வைத்து கடந்த வியாழக்கிழமை (2) ஆம் திகதி முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் விபத்துக்குள்ளாகியது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பிறைந்துறைச்சேனையைச் சேர்ந்த ஜுனைதீன் றிஸ்வான் (வயது 31) எனும் இளம் குடும்பஸ்தர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ் விபத்தில் காயமடைந்த ஆட்டோ சாரதியும் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த நபரும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.