உலக நீரிழிவு தினப்போட்டியில் காரைதீவு மாணவி டிசானிக்கா சாதனை

வி.ரி.சகாதேவராஜா)

உலக நீரிழிவுதினத்தையொட்டி இலங்கை அகஞ்சுரக்கும்தொகுதி நிபுணர்கள் கல்லூரியும்(SriLnaka College of Endocrinologists), இலங்கை நீரிழிவு சம்மேளனமும்(SriLanka Diabetic Association) இணைந்து நடாத்திய தமிழ்மொழிமூல சிரேஸ்ட மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டியில் காரைதீவு மாணவி பிரபாகரன் டிசானிகா மூன்றாமிடத்தை சுவீகரித்துள்ளார்.

மேற்படி அமைப்புகள் அகிலஇலங்கை ரீதியில் தமிழ்சிங்களஆங்கில மொழிமூலம் நடாத்திய சித்திரம் கட்டுரை மற்றும் பல்லூடக போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்புவிழா  இலங்கை மருத்துவ சங்க மண்டபத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

அங்கு சிரேஸ்ட மாணவர்களுக்கான தமிழ்மொழிமூல  கட்டுரைப்போட்டியில் கிழக்கு மாகாணத்திலிருந்து பங்குபற்றித்தெரிவான ஒரேயொரு மாணவியான காரைதீவு மாணவி பிரபாகரன் டிசானிகாவிற்கான பரிசும் வழங்கப்பட்டது.
இலங்கை அகஞ்சுரக்கும்தொகுதி நிபுணர்கள் கல்லூரியின் தலைவர் வைத்தியகலாநிதி டாக்டர் சாமிந்த கருசிங்க தலைமையில் நடைபெற்ற பரிசளிப்புவிழாவில் மாணவி டிசானிக்காவிற்கு பத்தாயிரம்ருபா பணப்பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டன.