ஆலையடிவேம்பு ஆயுள்வேத மத்திய மருந்தகத்தின் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கான குடிநீர் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை

(வி.சுகிர்தகுமார் )ஆலையடிவேம்பு ஆயுள்வேத மத்திய மருந்தகத்தின் ஏற்பாட்டில் அப்பிரதேசத்தில் வாழும் பொதுமக்களுக்கான குடிநீர் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக புதியதொரு நீர்தாங்கி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் அதில் இருந்து பொதுமக்கள் நீரைப் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன.
கல்முனை பிராந்திய ஆயுள்வேத வைத்திய தொடர்பாளர், வைத்தியர் எம்.எ.நபீலின்; வழிகாட்டலில் ஆலையடிவேம்பு ஆயுர்வேத மத்திய மருந்தகம் பொறுப்பதிகாரி வைத்தியர் .த.குவிதாகரனின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச சபை தவிசாளர் த.கிரோஜாதரன், வைத்தியர் திருமதி ஆமிலா ஜமால்டீன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் நவநீதராஜா மகாசக்தி நிறுவன தலைவி மங்கயற்கரசி செயலாளர் திலகராஜன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு நீர் வழங்கும் நடவடிக்கையினை ஆரம்பித்து வைத்தனர்.
குறிப்பிட்ட பிரிவில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் வைத்தியசாலையை அன்மித்த மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தனர்.
இதனை கருத்தில் கொண்ட ஆயுர்வேத மத்திய மருந்தகம் பொறுப்பதிகாரி குடிநீர் தாங்கி ஒன்றினை பெற்றுக்கொடுத்ததுடன் தொடந்தும் நீரை வழங்குவதற்கான கோரிக்கையினை பிரதேச சபை தவிசாளரிடம் முன்வைத்திருந்தார்.
இந்;நிலையில் தவிசாளரின் ஒத்துழைப்போடு பொதுமக்களுக்கான குடிநீர் வழங்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.