வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்கள் இரண்டுக்கு நிரந்தர வீடுகள் மக்கள் சேவை மன்றத்தினால் வழங்கி வைப்பு.

(ஹஸ்பர் ஏ ஹலீம்)வறுமைக் கோட்டின் கீழ் வாழும் வீடற்ற தகரக் கொட்டில்களில் மிக நீண்ட காலம் வாழும் இரு குடும்பங்களுக்கு வன்னி ஹோப் நிறுவனத்தின் அனுசரணையில் திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் நிரந்தர வீடு நிர்மாணிக்கப்பட்டு பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று (02) மன்றத்தின் தலைவர் எம். ரீ.எம். பாரிஸ் மற்றும் குறித்த பிரதேச செயலக உத்தியோகதர்களின் பங்குபற்றுதலுடன் இடம் பெற்றது.
வறுமை காரணமாக ஓலைக் குடிசைகளால் மிகுந்த கஷ்டங்களுக்கு மத்தியில் வாழும் நிரந்தர வீடுகளை நிர்மாணிக்க முடியாத பொருளாதார ரீதியில் பின்தங்கிய குடும்பங்களுக்கு வன்னி ஹோப் அவுஸ்ரேலியா தொண்டு நிறுவனத்தின் அனுசரணையில் மக்கள் சேவை மன்றத்தினால் வாழ்வதற்கான இல்லறம் எனும் செயற்றிட்டத்தின் கீழ் நிரந்தர வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. இந்த விசேட செயற்றிட்டத்தின் கீழ் மேற்படி இரு வீடுகளும் கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி கிராமத்திலும் தம்பலகமம் பிரதேச செயலக பிரிவில் உள்ள கல்மெட்டியாவெ கிராமத்தில் உள்ள மற்றொரு கூடம்பத்துக்குமே மேற்படி வீடுகள் வழங்கப்பட்டன.
வெளிநாடுகளில் உள்ள தனிப்பட்ட நலன் விரும்பிகளின் அன்பளிப்புகள் மற்றும் தர்ம பணங்கள் மூலம் இது போன்ற மனிதாபிமான சேவைகளை வன்னி ஹோப் நிறுவனம் நடைமுறைப் படுத்தி கொடுங்கள். அந்த அடிப்படடையில் அவுஸ்திரேலியாவில் உள்ள பிரபல சமூக ஆர்வலர் விந்திரன் ரஜினி நாகராஜா மற்றும் ஐக்கிய அமெரிக்காவில் வசிக்கும் சிவகுமார் குடும்பத்தார் ஆகியோருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
வன்னி ஹோப் நிறுவனமும் மக்கள் சேவை மன்றமும் திருகோணமலை மாவட்டத்தில் இன, மத, பிரதேச வேறுபாடுகளின் பல்வேறு மனிதாபிமான மற்றும் சமூக சேவைகள் சாா் வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.