இரா.சாணக்கியனினால் அரசடித்தீவு சக்தி மகளீர் இல்லத்திற்கு தளபாடங்கள் வழங்கி வைப்பு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனினால் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட அரசடித்தீவு சக்தி மகளீர் இல்லத்திற்கு தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான 2021ஆம் ஆண்டுக்கான வருடாந்த பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து இவை வழங்கி வைக்கப்பட்டன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் உத்தியோகபூர்வ செயலாளரும், இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் முகாமையாளருமான மதிமேனனினால் இவை வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் இலங்கை தமிழரசு கட்சி கிளையின் பட்டிரிப்புத் தொகுதியின் தலைவர் பா. அரியநேந்திரன், பட்டிருப்பு தொகுதியின் பொருளாளர் நடராஜா, பட்டிப்பளை தமிழரசுக்கட்சி கிளையின் தலைவர் நேசதுரை மற்றும் மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் புஸ்பலிங்கம் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.