மன்னாரில் அறுபது வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்ரர் தடுப்பூசி ஏற்றல் ஆரம்பம்.

( வாஸ் கூஞ்ஞ)

மன்னார் மாவட்டத்தில் கொவிட் தடுப்பூசி இரண்டும் போடப்பட்டு மூன்று மாதங்கள் கழிந்த நிலையில் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக போடப்பட்டு வரும் பூஸ்ரர் தடுப்பூசியானது புதன்கிழமை (01.12.2021) மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இராணுவத்தினரின் ஆதரவுடன் போடப்பட்டபோது எடுக்கப்பட்ட படங்கள்.

இவ் பூஸ்ரர் தடுப்பூசியானது மன்னார் மாவட்டத்தில் இவ் வாரம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இவை அடுத்த மாதத்தில் நிறைவு பெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது