தளவாய் பகுதியில்இரவு வேளைகளில் சட்டவிரோத முறையில் மணல் அகழ்வாளர்கள் பிடிபட்டனர்

செங்கலடி தளவாய் பகுதியில் இரவு வேளைகளில் சட்டவிரோத முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை கிராம மக்களுடன் இணைந்து பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் வ.சுரேந்திரன் தெரிவித்தார்.

தளவாய் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தோணாக்கள் கொண்ட பகுதியில் பாரிய மணல் கொள்ளை நடைபெற்றது. அப்பிரதேச மக்களுடன் இணைந்து மணல் ஏற்றிய நிலையில் டிப்பரும், கனரக டோசர் உட்பட வாகனங்களை பிடித்து சம்பவ இடத்திற்கு பொலிசாரை கொண்டு வந்து மேலதிக நடவடிக்கைக்காக நீதிமன்றம் கொண்டு செல்லப்படவுள்ளது.

குறித்த தளவாய் பிரதேசமானது அண்மைக்காலமாக தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வு, அரசகாணி திருட்டு இனரீதியாக பல இன்னல்களை கொண்டுள்ளனர். சட்டவிரோதமான பிரச்சனைகளால் இக்கிராம மக்கள் அரசாங்கத்தினதும் அரச ஊழியர்களின் செயற்பாடுகளை கண்டு அதிருப்தி அடைந்துள்ளனர். குறித்த பகுதிகளை அரசாங்க அதிபர் விசேட குழு கொண்டு அவதானிக்கும் பட்சத்தில் இப் பிரச்சனைகள் தீர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளது என செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் வN.சுரேந்திரன் தெரிவித்தார்.