இராம நாடகம் வடமோடிக் கூத்தின் இறுவட்டு வெளியீடும், கலைஞர் கௌரவிப்பும்

(படுவான் பாலகன்) இராம நாடகம் வடமோடிக் கூத்தின் இறுவட்டு வெளியீடும், கலைஞர் கௌரவம் வழங்கும் நிகழ்வும் அண்மையில் அம்பிளாந்துறை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

அடிப்புற அரங்கச் செயற்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சு.சந்திரகுமார் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கும் அடிப்புற அரங்கச் செயற்பாட்டுப் பேரவையின் முன்னெடுப்பில் 2018, 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அம்பிளாந்துறையில் ஆற்றுகைசெய்யப்பட்ட இராம நாடகம் வடிமோடிக் கூத்தின் இறுவட்டு இதன்போது வெளியிடப்பட்டதுடன்,  அதில் ஆடிய கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக கிழக்குப்பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி. புளோரன்ஸ் பாரதி கென்னடி, நிகழ்நிலை ஊடான  மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழியல்துறை, தமிழியற்புலத்தின் தலைவரும், தமிழ்ப் பண்பாட்டு மரபுச்செல்வங்கள் நடுவத்தின் இயக்குனருமான (பொ) தமிழ்ச்செம்மல், முனைவர் போ.சத்தியமூர்த்தி, கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் தலைவர் கு.ரவிச்சந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.