மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

(ரக்ஸனா)

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் கடந்த 6 வருடகாலமாக அமைய அடிப்படையில் கடமைபுரியும் ஊழியர்கள் களுதாவளையில் அமைந்துள்ள மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் முன்னால் புதன்கிழமை(01) தமக்கு வழங்கப்பட்ட அமைய அடிப்படையிலான நியமனத்தை நிரந்தரமாக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மண்முனைதென் எருவில் பற்று பிரதேச சபையில் 64 சுகாதார ஊழியர்கள் கடந்த 6 வருடகாலமாக அமைய அடிப்படையில் கடடையாற்றி வருகின்றனர் எனவே தமது நியமனத்தை நிரந்தரமாக்குவதற்கு கிழக்கு மாகாண ஆளுனர்இ பிரமதர் மற்றும் ஜனாதிபதி ஆகியோ முன்றவர வேண்டும் என இதன்போது அவர்கள் தெரிவித்து பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

கால நீடிப்பு வேண்டாம், எமக்கு நிரந்தர நியமனம் வேண்டும், மாண்பு மிகு ஜனாதிபதியை எதிர்பார்க்கின்றோம், இந்த அரசை நம்புகின்றோம், இது எங்களது நியாயமான கோரிக்கை உள்ளிட்டபல வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர்.

இறுதியில் தமக்க நிரந்தத நியமனம் பெற்றுத்தருமாறு கோரி மண்முனை தென் எருவிப் பற்று பிரதேச சபைத் தவிசாளர் ஞா.யோகநாதன் அவர்களிடம் மகஜர் ஒன்றையும் சமர்ப்பித்தனர்.

நாங்கள் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் ஆறு வருடங்களுக்கு மேலாக தற்காலிக, அமைய மற்றும் பதிலீட்டு ஊழியர்களாகக் கடமையாற்றி வருகின்றோம் என்பது தாங்கள் அறிந்த விடயமாகும். இச்சபையுடைய வருமானம், சேவை மற்றும் ஏனைய ஒவ்வொரு செயற்பாடுகளில் எமது சேவைகள் அளப்பெரியது நாங்கள் எந்த நிலைமைகளிலும் காலம், நேரம் பாராது முழு மனதுடன் சேவையாற்றுவதுடன் சூழல் சுத்திகரிப்பு மற்றும் அனர்த்த நிலைமை காலங்களிலும்இ தற்போதைய கொவிட்-19 தொற்றுநோய் நிலைகளிலும் எமது சுகாதாரத்தினையும் உயிரையும் துச்சமாக நினைக்காமல் பொதுநல செயற்பாடுகளில் இப்பிரதேச சபையுடன் ஒன்றிணைந்து பாடுபட்டு உழைத்து வருகின்றோம்.

அத்துடன் மாதாந்தம் குறைந்த ஊதியத்தினை பெற்று வருகின்ற போதிலும் இப்பிரதேச சபையின் சேவை, முன்னேற்றம் அபிவிருத்தி போன்றவற்றிற்கு அயராது உழைக்க தவறியதேயில்லை. எமது ஒவ்வொரு ஊழியர்களினதும் குடும்பம் குறைந்த மாதாந்த வருமானத்தைக் கொண்டு தற்பொழுது ஏற்பட்டுள்ள விலைவாசி அதிகரிப்புக்கு முகம்கொடுத்து வாழ வேண்டிய ஒரு இக்கட்டான ஒரு சூழ்நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளோம்.

மேலும் நாங்கள் 6 வருடங்களுக்கு மேல் இவ்வாறு பாரிய சேவையை இச்சபைக்கு வழங்கிய போதிலும் இன்று வரை எங்களுக்கான எந்தவித ஒரு நிரந்தர நியமனமும் வழங்கப்படாமையினால் எங்களை புறக்கணிப்பதாக உணர்வதுடன் உளரீதியாக பாதிப்புக்கும் உள்ளாகியுள்ளோம். அத்துடன் எங்களில் மாறுபட்ட வயது உடையவர்களுக்கு இன்னும் கால நீடிப்பினால் நிரந்தர நியமனம் பெற்றுக்கொள்வதில் பெரும் தாக்கம் ஏற்படும் ஆகவே எமது நிலைமையையும் தங்களது கவனத்தில் கொண்டு எமது எதிர்கால நன்மை என்பதனை தங்களின் அன்பான கவனத்துக்கு அறியத்தருகின்றோம்.

கருதி எங்களுக்கு நிரந்தர நியமனத்தை மிக விரைவாக பெற்றுத் தருமாறு தங்களைப் இத்துடன் எமது தற்காலிகஇ அமைய மற்றும் பதிலீட்டு ஊழியர்களின் விபரம் இத்துடன்பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். என அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.