திருமலை, நகரசபை வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்

வடமலை ராஜ்குமார்
திருகோணமலை நகராட்சி மன்றத்தின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று 29ம் திகதி சபை உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றபட்டது

இன்று 29ம்  காலை திருகோணமலை நகராட்சி மன்றத்தின் தலைவர் நா.இராஜநாயகம் தலைமையில் கூடியது.இதன் போது 314 923 000 முன்னூற்றி பதினான்கு மில்லியன் ஒன்பது இலட்சத்து இருபத்து மூவாயிரம் மொத்த பெறுகையும் 314 922 700 முன்னூற்றி பதினான்கு மில்லியன் ஒன்பது இலட்சத்து இருபத்திரண்டு ஆயிரத்து எழுநூறு ரூபாய் மொத்த செலவீனமுமாக இவ் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.

சபையின் மொத்த உறுப்பினர்கள் 24 பேரில் 23 உறுப்பினர் இன்றைய அமர்விலே கலந்து கொண்டிருந்தனர். ஒருவர் சபைக்கு சமூகமளிக்கவில்லை இதனடிப்படையில் இவ்வரவு செலவுத் திட்டம் 23 பேரின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றபட்டது.