பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில் புதிய பொலிஸ் நிலையம் இன்று(29) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது
நிந்தவூரில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட பொலீஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் டி .எம். எஸ். கே .திஸாநாயக்கா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி கமல் சில்வா பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதிய பொலிஸ் நிலையத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எஸ். எம். வை. செனவிரத்ன, அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர். எம். டி .ஜெயந்த ரத்னாயக்க, கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக, நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி எம் .அப்துல் லத்தீப், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கே .டி .எஸ் .ஜெயலத் உட்பட சர்வமத தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்