தென்மராட்சியில் கொங்கிறீட் வீதித் திட்டத்தில் தெரிவான மூன்று கிராமிய வீதிகளுக்கு அடிக்கல்

சாவகச்சேரி நிருபர்

கிராமிய வீதிகளை கொங்கிறீட் வீதியாக புனரமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவில் மூன்று கிராமிய வீதிகளுக்கு கடந்த 26/11 வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சினால் முன்னெடுக்கப்படும் குறித்த வேலைத்திட்டம் யாழ் மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் முன்மொழிவு மற்றும் கண்காணிப்பில் முன்னெடுக்கப்படுகிறது.அந்தவகையில் தென்மராட்சி பிரதேசத்தில் முதற்கட்டமாக கைதடி மத்தி,கைதடி மேற்கு மற்றும் கைதடி தென் கிழக்கு கிராமங்களில் கொங்கிறீட் வீதிகளுக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.தலா 2மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்படவுள்ள குறித்த வீதிகளுக்கான அடிக்கல்லை பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜனின் செயலாளரும்,கரவெட்டி பிரதேசசபை உறுப்பினருமான ச.இராமநாதன் நாட்டி வைத்திருந்தார்.