இலங்கை கல்விசாரா ஊழியர் ஒன்றிணைந்த சங்கத்தினால் அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில்கல்வி வலய பிரிவின் கீழ் கடமையாற்றும் கல்விசாரா ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்துஅதற்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் முகமாக சங்கத்தின் பிரதித்தலைவர் ஏ. எம். ஜெமில் தலைமையில் நேற்று (28) விநாயபுரம் திரு/ கோரைக்களப்பு திரு / சக்தி வித்தியாலய மண்டபத்தில் கருத்தரங்கு நடைபெற்றது.
இதன் போது கல்விசாரா ஊழியர்கள் எதிர் நோக்கும் பதவியுயர்வு மற்றும் மேலதிக கொடுப்பணவு, கிழக்குமாகாணத்தின் புதிய ஆட்சேர்ப்பு திட்டத்தினை நடைமுறைப்படுத்தல் போன்ற பல பிரச்சினைகள்சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் சங்கத்தின் பிரதம செயலாளர் ஏ.கே. டபிள்யூ. விஜேயசேகர, அம்பாரை மாவட்ட செயலாளர்எம்.ஜே.எம். சஜீத், சங்கத்தின் இணைப்புச் செயலாளர் எம்.ஏ.எம். அப்துல்லாஹ், திருக்கோவில் கல்வி வலயஇணைப்பாளர் ஏ.நபதீபன் உட்பட கல்வி சாரா ஊழியர்களும் கலந்து சிறப்பித்தனர்.