சேதனப் பசளை தொடர்பான விவசாயிகளுக்கு விழிப்புணர்வுச் செயற்பாடு.

(ரக்ஸனா)

சேதனப் பசளை தொடர்பான விவசாயிக்கான விழிப்புணர்வுச் செயற்பாடு ஒன்று வெள்ளிக்கிழமை(26) மட்டக்களப்பு மவாட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தின் பாலையடிவட்டைக் கிராமத்தில் நடைபெற்றது.

அப்பகுதி விவசாய விரிவாக்கல் போதனாசிரியர் ரி.கோபி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், உதவி விவசாயப் பணிப்பாளர் த.மேகராசா, மற்றும் ஏனைய விவசாய உத்தியோகஸ்த்தர்கள், அரச அதிகாரிகள், விவசாயிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது விவசாயிகளுக்கு தேதனைப் பசளை தொடர்பான விளக்கங்களும், பயிற்சிகளும் வழங்கப்பட்டதுடன், இயந்திரத்தின் மூலம் இயற்கையாகவே கிடைக்கும் இலைகுளைகளைத் துண்டு துண்டுகளாக வெட்டும் செயன்முறையும், விவசாயிகளுக்குச் செய்து காண்பிக்கப்பட்டன.