கிண்ணியா குறிஞ்சாக்கேணிபடகு சேவையை பொறுப்பெடுத்தது இலங்கை கடற் படை

கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு விபத்து சம்பவத்தின் பின் இலவச படகு சேவையை இலங்கை கடற்படை பொறுப்பெடுத்துள்ளது இன்று (26) முதல் குறித்த சேவை இடம் பெற்று வருகிறது. கிண்ணியா நகர சபை பிரதேச சபையை இணைக்கும் இறங்கு துறையே குறிஞ்சாக்கேணி பாலம் இதில் சுமார் 25 நபர்கள் ஒரே தடவையில் பயணிக்க முடியும் .பாதுகாப்பு அங்கிகள் நிறைந்த சேவையாக இச் சேவை காணப்படுகிறது பால புனர் நிர்மாணம் முடிவடையும் வரை குறித்த கடற்படையின் படகு சேவை இடம் பெறும் என தெரிவிக்கப்படுகிறது. இன்றைய தினம் காலையில் பாடசாலை மாணவர்கள் பொது மக்கள் என பலரும் பயணித்தமை குறிப்பிடத்தக்கது.