காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் குருதி சுத்திகரிப்பு பிரிவு ஆரம்பிக்கப்பட்டு மூன்றாண்டுகள் நிறைவு!!

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் குருதி சுத்திகரிப்பு பிரிவு ஆரம்பிக்கப்பட்டு இதுவரை 6500 தடவைகள் குருதி சுத்திகரிப்பு செய்துள்ளதாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.ஜாபீர் தெரிவித்துள்ளார்.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் குருதி சுத்திகரிப்பு பிரிவு ஆரம்பிக்கப்பட்டு மூன்றாண்டுகள் நிறைவடைவதையொட்டி (24) புதன்கிழமை காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் மூன்றாண்டு நிறைவு வைபவம் நடைபெற்றது.

இதில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.ஜாபீர் உட்பட வைத்தியர்கள், தாதியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் குருதி சுத்திகரிப்பு பிரிவு ஆரம்பிக்கப்பட்டு மூன்றாண்டுகளில் 150 சிறு நீரக நோயாளர்களுக்கு 6500 தடவைகள் குருதி சுத்திகரிப்பு செய்துள்ளதுடன் 2500 தடவைகள் ஊசிமருந்து வழங்கப்பட்டுள்ளன.

களுவாஞ்சிகுடி, காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை, ஆரையம்பதி போன்ற பிரதேசங்களிலிருந்து சிறுநீரக நோயாளர்கள் குருதி சுத்திகரிப்புக்காக இங்கு வருகை தருவதாகவும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.ஜாபீர் தெரிவித்துள்ளார்.

இந்த உயரிய சேவையில் பணியாற்றும் வைத்தியர்கள் தாதியர்கள், மற்றும் இதற்காக உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.