வெருகலில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டு பின்னர் பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்று கையளிப்பு

எப்.முபாரக்
கிண்ணியா – குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் உயிரிழந்த பாடசாலை மாணவர்கள்,பொதுமக்களுக்காக  வெருகல் பிரதேச செயலாளர் பிரிவின் இலங்கைத்துறை பகுதியிலிருந்து – இலங்கைத்துறை முகத்துவாரத்திற்கு பாடசாலை மாணவர்கள் பயணிக்கின்ற இழுவைப் பாதை படகு சேவை இடம்பெறும் இடத்தில் வியாழக்கிழமை (25) மௌன பிரார்த்தனை இடம்பெற்றது.
இலங்கைத்துறை பிரதேச பகுதி பாடசாலை மாணவர்கள்,பெற்றார் சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் மௌன பிரார்த்தனையில் வெருகல் பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி கலந்து கொண்டதோடு பெற்றார்கள்,பாடசாலை மாணவர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அத்தோடு குறித்த இடத்திற்கு வருகை தந்த வெருகல் பிரதேச செயலாளரிடம் , இலங்கை துறையிலிருந்து இலங்கைத் துறைமுகத்துவாரத்திற்கான பாலம் ஒன்று அமைத்து தருமாறும் சுமார் 120 மாணவர்களும், பொதுமக்களும் தினந்தோரும் உயிரச்சுறுத்தலுக்கு மத்தியில் பயணிப்பதாக தெரிவித்து பிரதேச மக்கள் மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.