மகளிர்களுக்கும் பியர் வயிறு அற்ற கணவனை பெற உரிமை – விழிப்புணர்வு

ந.குகதர்சன்

இளைஞர் வலையமைப்பினால்  (YAN Sri Lanka) மதுபானம் மற்றும் சிகரட் பாவனையினால் ஏற்படும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வுகள் அகில இலங்கை ரீதியாக 25 மாவட்டங்களிலும் இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் வலையமைப்பின் (லுயுN ளுசுஐ டுயுNமுயு) மாவட்ட பணிப்பாளர்களான எல்.ரி.ரிஜா முகம்மட், ஜே.எம்.அஸீம், மற்றும் என்.துவாரகா ஆகியோர் தலைமையில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி விழிப்புணர்வு நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இவ்விழிப்புணர்வு நிகழ்வில் அனைத்து மகளிர்களுக்கும் பியர் வயிறு அற்ற கணவனை பெற உரிமை உண்டு மற்றும் சாராயக் கம்பனிகளின் தந்திரோபாயங்களுக்கு ஏமாறும் ஏமாளிகளை மூளை உள்ள எந்த பெண் தான் விரும்புவாள்? போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகள் மற்றும் துண்டுபிரசுரங்கள் மூலம் மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.