குறிஞ்சாக்கேணி படகுவிபத்தில் பக்கச்சார்பற்ற நேர்மையின விசாரனை அவசியம்.

(அ . அச்சுதன்) 
கிண்ணியா – குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் மாணவர் உள்ளிட்ட அறுவர்  உயிர் இழந்த செய்தி அறிந்து அதிர்ச்சியும் ஆழ்ந்த  கவலையும் அடைகின்றோம்
உயிர் இழந்தோர் குடும்பங்களுக்கும் அவர்தம் உற்றார், உறவினர்களுக்கும்  எமது இரங்கலையும் துயர் பகிர்வினையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என திருகோணமலை மாவட்ட இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் ச. குகதாசன் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்
விபத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவ மனைகளில்  சிகிச்சை பெற்றுவரும் அனைவரும் விரைவில் குணமடைய  இறைவனை வேண்டுகின்றோம்.
இந்த விபத்துப் பற்றிப் பக்கச் சார்பற்ற  நேர்மையான விசாரணை நடத்தி இது போன்ற நிகழ்ச்சிகள் எதிர்காலத்தில் நிகழாமல் இருக்க உரிய அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் ஆவன செய்ய வேண்டும் என வலியுறுத்திக்  கேட்டுக் கொள்கின்றோம்.
கிண்ணியா – குறிஞ்சாக்கேணி போல, மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வேதத்தீவு,ஈச்சிலம்பற்றுப் பிரதேச செயலளார் பிரிவில் உள்ள இலங்கைத்துறை – மாதவிபுரம் – இலங்கைத்துறை- முகத்துவாரம் மற்றும் கறுக்காமுனை – புனையடி – இலங்கைத்துறை- முகத்துவாரம் ஆகிய இடங்களில் மாணவர்கள் நாள்தோறும் ஆறுகளைக் கடந்தே பாடசாலைக்குச் செல்கின்றனர். இந்த இரண்டு  இடங்களிலும்  உரிய அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்துவதோடு ஆட்சியாளர் பாலம் ஆவன செய்ய வேண்டும் எனவும் மேலும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.