கிண்ணியாவுக்கு மாவட்ட அரசாங்க அதிபர் விஜயம்.!

(அ . அச்சுதன்)
கிண்ணியா குறிஞ்ஞாங்கேணியில் நேற்று (23) நடைபெற்ற படகு விபத்தில் 06 பேர் உயிழந்துள்ளதுடன் 21 பேர் கிண்ணியா மற்றும் திருகோணமலை வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
குறித்த நிலவரத்தை ஆராய்வதற்கு மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாடிகோராள உடனடியாக கிண்ணியாவிற்கு விஜயம் மேற்கொண்டதுடன் உரிய தரப்பினருடன் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடினார்.
கிண்ணியா பிரதேச செயலகத்தில் இக்கலந்துரையாடல் நடைபெற்றதுடன் குறித்த கலந்துரையாடலில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ்,அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.