கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் ஆலமரம் ஒன்று அடியோடு சாய்ந்து வீழ்ந்தது – போக்குவரத்து ஸ்தம்பிதம்.

எஸ்.அஷ்ரப்கான்)

கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் நிந்தவூர் அனல் மின் உற்பத்தி நிலையத்தின் முன்பாக ஆலமரம் ஒன்று அடியோடு சாய்ந்து வீழ்ந்துள்ளதுள்ளமையால் போக்குவரத்து ஸ்தம்பிதமாகியுள்ளது.

இன்று புதன் கிழமை (24) காலை 7.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன்,   பிர தான வீதிப் போக்குவரத்தும் இதனால் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும் இதனால் பயணிகள் உள் வீதிகளை போக்குவரத்திற்காக பயன் படுத்தி வருகின்றனர்.