சாவகச்சேரியில் வாள் வெட்டு;ஒருவரின் விரல் துண்டாடப்பட்டது

சாவகச்சேரி நிருபர்
சாவகச்சேரி-கச்சாய் வீதிப் பகுதியில் 23/11 செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
கச்சாய் வீதி சாவகச்சேரிப் பகுதியைச் சேர்ந்த 38வயதான சி.சிவபாலன் என்பவரே வாள் வெட்டுக்கு இலக்காகி கை விரல் துண்டாடப்பட்டதுடன்,தோள்பட்டை,வயிறு,கைப் பகுதிகளிலும் வெட்டுக் காயங்களுக்கு இலக்கான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.வாள் வெட்டுச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.