ஓட்டமாவடி – மஜ்மா நகரில் 2,000 மரங்கள் நடும் திட்டம் 

(எச்.எம்.எம்.பர்ஸான்)
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மஜ்மா நகர் பகுதியில் சுமார் இரண்டாயிரம் மரங்கள் நடும் வேலைத்திட்டம் ஞாயிற்றுக்கிழமை (21) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மஜ்மா நகர் கிராம அபிவிருத்தி சங்க தலைவரும் சமூக செயற்பாட்டாளருமான ஏ.எல்.சமீம் தெரிவித்தார்.
பசுமையான சூழலை உருவாக்கும் நோக்கில், நாட்டில் பல்லாயிரம் மரங்களை நாட்டி வரும் சிட்டி கார்டன்ஸ்  CSR Tree 4 Mercy எனும் அமைப்பினூடாக இந்த மர நடுகை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தில், கொரோனா உடல்களை நல்லடக்கம் செய்யும் மையவாடி, வீதியோரங்கள், பள்ளிவாசல்கள் உட்பட பொது இடங்களில் மரங்கள் நாட்டப்படவுள்ளன.
இத் திட்டத்தை மேற்கொண்டு வரும் சிட்டி கார்டன்ஸ்  CSR Tree 4 Mercy அமைப்பின் பணிப்பாளர் ஹிழுரு எம் சித்தீகிக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஏ.எல்.சமீம் தெரிவித்தார்.