சுவிஸ் உதயம் அமைப்பினால் கோழிப்பண்ணை கையளிப்பு

எஸ்.சபேசன்
சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் வாழ்வாதாரத்தை இழந்த பெரியநீலாவணையினைச் சேர்ந்த ஒரு குடும்பத்திற்கு கோழிப்பண்ணை அமைத்துக் கொடுத்து அதனை திறந்துவைக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை 20 ஆம் திகதி சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக் கிளையின் தலைவர் ஓய்வு நிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில் இடம்பெற்றது.
சுவிஸ் உதயம் அமைப்பினரிடம் இக்குடும்பத்தினர் வேண்டிக்கொண்டதற்கு இணங்க ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியில் இவ் உதவித்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் தலைவர் டி.எல்.சுதர்சன் செயலாளர் அம்பலவாணர் ராஜன், பொருளாளர் க.துரைநாயகம் மற்றும் அமைப்பின் நிருவாக சபை உறுப்பினர்களின் முயற்சியினால் இவ் உதவி வழங்கிவைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் செயலாளர் அம்பலவாணர் ராஜன், கிழக்குமாகாணக்கிளையின் பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன், கணக்காய்வாளர் நாகேந்திரன் உறுப்பினர்களான் ஆசிரியர் ஜீவராஜ், கண்ணன்,  ஓய்வுநிலை ஆசிரியர் குணசேகரம்,அகிலன் மற்றும் மட்டக்களப்புக்கான இணைப்பாளர் ரோமிலா ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.